ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(20) இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் ஏனைய இராஜதந்திரிகளையும் சந்தித்து இரு தரப்பினருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையிலான நீண்ட கால உறவை மேலும் மேம்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் இந்த விஜயம் அமையுமென வௌிவிவகார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.