பதவிக் காலம் முடிவதற்கு முன் விலகிய உலக வங்கியின் தலைவர்

காலநிலை மாற்றம் தொடர்பான விமர்சனங்களில்  சிக்கியிருந்த உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தனது பதவிக் காலம் நிறைவடைவதற்கு ஒரு வருடங்கள் உள்ளபோதும் பதவியை துறந்துள்ளார்.

காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கு மல்பஸ் எதிரானவர் என அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபர் அல்கோர் தெரிவிதிருந்தார். கடந்த 2019 ஆம் ஆண்டு அமெரிக்கவின் முன்னாள் அதிபர் டோனால்ட் றம்பினால் நியமிக்கப்பட்ட மல்பஸ் கடந்த புதன்கிழமை (15) பதவி விலகியிருந்தார்.

கடந்த நான்கு வருடங்களில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தான் பல நன்மைகளை செய்ததாகவும், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் எதிர்கொண்ட பல நெருக்கடிகளை வங்கி விரைவாகவும், தகுந்த முறையிலும் கையாண்டதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

189 உறுப்பு நாடுகளை கொண்ட உலக வங்கி உலக நாடுகளின் அபிவிருத்தி பணிகளுக்கு உதவும் முகமாக 1944 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. உலக வங்கி அமெரிக்காவினால் வழிநடத்தப்படுவதுடன், அனைத்துலக நாணய நிதியம் ஐரோப்பாவினால் வழிநடத்தப்படுகின்றது.

புதிய தலைவரை தாம் விரைவில் தெரிவுசெய்ய உள்ளதாக அமெரிக்கா திறைசேரியின் செயலாளர் ஜனற் ஜெலன் தெரிவித்துள்ளார்.