பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்பதாக ஜனாதிபதி  உறுதி

வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையை அதிலிருந்து மீட்டெடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், ஐக்கிய தேசியக் கட்சியின் 76 ஆவது வருடப்பூர்த்தி விழா இன்று கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது.

‘ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப்பொருளில் கட்சியின் வருடப்பூர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய  போது  பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையை அதிலிருந்து மீட்டெடுப்பதாக ஜனாதிபதி  கூறியுள்ளார்.