ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அமெரிக்கா பயணம்!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க திங்கட்கிழமை ( செப்டெம்பர் 22) அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ அரசமுறை பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 80 ஆவது கூட்டத்தொடரில் புதன்கிழமை (செப்டெம்பர் 24) ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இவ்வாரம் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இதற்கமைய ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது கூட்டத்தொடரில் கலந்துக்கொள்வதற்காக ஜனாதிபதி இன்று அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார். இவ்விஜயத்தில் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தும் கலந்துகொள்ளவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை  கூட்டத்தில்  புதன்கிழமை (24) அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு (இலங்கை நேரப்படி அதிகாலை 12 மணியளவில்)  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உரையாற்றவுள்ளார்.

இந்த பயணத்தின் போது, ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க பயணத்தை நிறைவு செய்ததன் பின்னர்  ஜனாதிபதி ஜப்பானின் ஒசாகாவிற்குச் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.அங்கு சிறப்பு கண்காட்சி 2025 இல் கலந்து கொள்வார். கலாச்சாரம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் நாட்டின் தனித்துவமான சலுகைகள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.