இலங்கையில் 7 1/2 மணி நேர மின் தடை

392 Views

இலங்கையில் மின் தடை

இலங்கையில் மின் தடை: இன்றைய தினம் (2022-3-2) 7 1/2 மணி நேர மின் தடை அமல்படுத்தப்படுகிறது.

நாட்டில் எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுபாடு காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது யபயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்கரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்றைய தினம் 7 1/2 மணி நேர மின்சார தடையை ஏற்படுத்துவதற்கான அனுமதியை இலங்கை மின்சார சபைக்கு தாம் வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மின் உற்பத்தி நிலையங்கள் காணப்படுகின்ற போதிலும், மின்சார உற்பத்திக்கு தேவையான ஏரிபொருள் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply