அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணம் வழங்கும் செயற்பாட்டில் அரசியல் தலையீடுகளினால் கிராம உத்தியோகத்தர்களால் சுயாதீனமாக செயற்பட முடியாத நிலை உருவாகியுள்ளதாக இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது
மேலும் இவ்வாறான அரசியல் அச்சுறுத்தல்கள் தொடர்வதால் நாடளாவிய ரீதியில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் நந்தன ரணசிங்க தெரிவித்துள்ளார்.