கொழும்பு மாநாகர சபையில் ஆட்சியமைப்பதில் அரசியல் கட்சிகளுக்கு பெரும் நெருக்கடி

கொழும்பு மாநகரசபையில் ஆட்சியமைப்பதற்கு அவசியமான 59உறுப்பினர்கள் அல்லது அதற்கு அதிகமான  உறுப்பினர்களை எந்த அரசியல் கட்சிகளும் தனித்து பெற்றுக்கொள்ளாத காரணத்தால் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதில் அரசியல் கட்சிகள் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

நடைபெற்று நடைபெற்று முடிந்த 339 உள்ளூராட்சிமன்ற அதிகாரசபைகளுக்கான தேர்தலில் ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி 265 உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளை கைப்பற்றியது.

இருப்பினும் 265 உள்ளூராட்சிமன்ற அதிகாரசபைகளில் தேசிய மக்கள் சக்திக்கு 116 உள்ளூராட்சிமன்ற அதிகார சபைகளில் மாத்திரம் தான் தனித்து ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்கப்பெற்றது.

இவ்வாறான பின்னணியில் உள்ளூராட்சிமன்றங்களில் பிரதான கேந்திர மையமாக கருதப்படும் கொழும்பு மாநகர சபை  தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் நாட்டு மக்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.

கொழும்பு மாநகசபையில் ஆட்சியமைப்பதற்கு அவசியமான 59 உறுப்பினர்கள் அல்லது அதற்கு அதிகமான  உறுப்பினர்களை எந்த அரசியல் கட்சிகளும் தனித்து பெற்றுக்கொள்ளவில்லை.

ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபையில் 48 உறுப்பினர்களை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் ஏனைய அரசியல் கட்சிகள் உட்பட சுயேட்சைக் குழுக்கள் அனைத்தும் 69 உறுப்பினர்களை பெற்றுக்கொண்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் அரசியல் கட்சிகள் மத்தியில் பாரிய நெருக்கடி நிலை தோற்றம் பெற்றுள்ளது.தேசிய மக்கள் சக்தி கொழும்பு மாநகர சபையில் அதிகளான ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளதால் ஆட்சியமைப்பதில் எவ்வித சிக்கலும் கிடையாது.

தனி கட்சி என்ற அடிப்படையில் அதிகளவான ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளோம். ஆகவே நாங்களே ஆட்சியமைப்போம் என்று அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நெருக்கடிக்கு மத்தியில் கொழும்பு மாநாக சபை மேயர் பதவிக்கான போட்டியில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஒன்றிணைந்துள்ளது.

சகல எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் தலைமையில் கொழும்பு மாநகர சபையை கைப்பற்றுவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபை விவகாரம் தொடர்பில் சர்வஜன சக்தியின் தேசிய அமைப்பாளர் திலும் அமுனுகம குறிப்பிடுகையில்,

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து உண்மை நோக்கத்துடன் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்கு பதிலாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு பதிலாக டீல் அரசியலுக்கான பேச்சுவார்த்தைகளே தற்போது நடைபெறுகிறது.

எதிர்க்கட்சிகளால் ஒரு இணக்கப்பாடு எட்டப்பட்டு, முன்மொழியப்படும் நகர மேயரின் சிறந்த திட்டங்களை ஆராய்ந்து எமது தீர்மானத்தை அறிவிப்போம் என்றார்.