தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நினைவுப் பதாதை காவல்துறையினரால் அகற்றப்பட்டது. தியாக தீபம் திலீபனினின் நினைவு அனுஷ்டிப்புகள் வடக்கு கிழக்கு எங்கும் பரவலாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் திருகோணமலையில் கடந்த நான்கு நாட்களாக அஞ்சலி நினைவேந்தல்கள் இடம்பெற்றுவந்த இடத்திலிருந்து நினைவுப் படம் திருக்கோணமலையில் போலீசாரால் 19.09.2025 இன்று காலை அகற்றப்பட்டது..
தமிழ் தேசியப் செயற்பாட்டாளர்களால் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் திலீபனின் நினைவு உருவப்படம் கொண்ட பதாதை சிவன் கோயிலடியில் நிறுவப்பட்டு தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மாலை 5.15 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டு, வந்தது.
இந்நிலையில் இன்றைய தினம் திருக்கோணமலை பிரதான காவல்துறை அதிகாரிகளால் குறித்த நினைவுபடம் முறையற்ற விதத்தில் அகற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொதுமக்களும் சிவில் செயற்பாட்டாளர்களும் தமது கண்டனத்தை தெரிவித்து உள்ளனர்.