தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனுடைய வீடு என்று சொல்லப்படும் அவரது சகோதரியின் காணியில் கட்டப்படவுள்ள கட்டடம் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் குறித்த விடயங்கள் தொடர்பில் வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளர்களான நடராஜா அனந்தராஜ் வெளிப்படுத்தினார். முன்னதாக குறித்த வீட்டை புனரமைப்பு செய்து வேலுப்பிள்ளை பிரபாகரனின் சகோதரியிடம் கையளிப்பதற்கு வல்வெட்டித்துறை நகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில் தற்போது வேலுப்பிள்ளை பிரபாகரன் தமது 13வது வயது வரை வாழ்ந்த வீட்டை புனரமைத்து அருங்காட்சியகமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளர்களான நடராஜா அனந்தராஜ் தெரிவித்துள்ளார்.
வே.பிரபாகரன் சிறுவயதில் வாழ்ந்த வீட்டின் காணி உலகெங்கும் வாழும் தமிழர்கள் போற்றி வணங்கும் ஒரு புனித இடமாகும். அந்த இடத்தில் காணி உரிமையாளர்களின் விருப்பத்திற்கு அமைய அமைக்கப்படும் புதிய கட்டடம் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் இடமாகவும் பயனளிக்கும் வகையிலும் அமைதல் வேண்டும் என்று வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளர்களான நடராஜா அனந்தராஜ் தெரிவித்துள்ளார்.
இதன்படி குறித்த கட்டடத்திற்கான வரைபு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



