துருக்கியில் வாழும் இலங்கையர்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு அல்லது தகவல் வழங்குவதற்கு துருக்கியிலுள்ள இலங்கைத் தூதரகம் அவசர தொலைபேசி இலக்கங்களை அறிவித்துள்ளது.
இதன்படி 00903124271032 மற்றும் 00905344569498 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியுமென தெரிவித்துள்ளது.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்த 15 இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தூதுவர் ஹசந்தி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.