நள்ளிரவில் எகிறியது பெற்றோல் விலை ; 20 ரூபாயால் அதிகரிப்பு

361 Views

எகிறியது பெற்றோல் விலைஎகிறியது பெற்றோல் விலை: நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் எரிபொருட்களின் விலைகள் உயர்த் தப்பட்டுள்ளன என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதன்படி, ஒக்ரேன் 92 ரக பெற்றோலின் விலை 20ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 177 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

184 ரூபாயாக விற்கப்பட்ட ஒக்ரேன் 95 பெற்றோலின் விலை 23 ரூபாயால் உயர்ந்து 207 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஓட்டோ டீசலின் விலை 111 ரூபாயிலிருந்து 10 ரூபாயால் உயர்ந்து 121 ரூபாயாகவும், 144 ரூபாய் விற்கப் பட்ட சுப்பர் டீசலின் விலை15 ரூபாயால் உயர்ந்து 159 ரூபாயாக விற்கப்பட்டுள் ளது.

மண்ணெண்ணெயின் விலை 77 ரூபா யிலிருந்து 10 ரூபாயால் அதிகரித்து 88 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளன

Leave a Reply