யாழ்ப்பாணம்: வடமராட்சியில் 2 நாட்களாக காத்திருந்தும் டீசல் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த மக்கள்

 2 நாட்களாக காத்திருந்தும் டீசல் கிடைக்காமல்

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையில் 2 நாட்களாக காத்திருந்தும் டீசல் கிடைக்காமல் பலர் ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளனர்.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் அவ்வப்போது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே எரிபொருள் விநியோகம் இடம்பெற்று வருகிறது.

வடமராட்சி பிரதேசத்திற்குட்பட்டு பருத்தித்துறை மந்திகை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் விநியோகம் இடம்பெற்று வருகிறது.

டீசல் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து நேற்றைய தினம் (04) அதிகாலை முதல் வாகனங்களை வரிசையாக நிறுத்தி பலர் காத்திருந்தனர். டீசல் தாங்கி வாகனம் வரவில்லை வந்ததும் விநியோகிப்போம் என எரிபொருள் நிரப்பு நிலைய தரப்பினரால் கூறப்பட்டிருந்த போதிலும் நேற்று இரவுவரை கிடைக்கவில்லை.

WhatsApp Image 2022 04 05 at 3.33.34 PM யாழ்ப்பாணம்: வடமராட்சியில் 2 நாட்களாக காத்திருந்தும் டீசல் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த மக்கள்

சில கிலோ மீற்றர் நீளத்துக்கு வரிசை நீண்ட நிலையில் இரண்டாவது நாளாகவும் இன்றும் காத்திருந்தனர். இன்று காலையில் டீசல் தாங்கி வாகனம் வந்தநிலையில் அதில் இருந்து இறக்கப்பட்ட டீசல் விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியிருந்தது.

இறக்கப்பட்ட டீசல் விநியோகித்து முடிவடைந்த  போதிலும் காத்திருந்த வாகனங்களில் அரைவாசிக்கு மேல் ஏமாற்றத்துடன் தொடர்ந்து காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

WhatsApp Image 2022 04 05 at 3.33.31 PM யாழ்ப்பாணம்: வடமராட்சியில் 2 நாட்களாக காத்திருந்தும் டீசல் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த மக்கள்

வடமராட்சி பிரதேசத்தின் பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்த நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் இவ்வாறு டீசல் கிடைக்காது ஏமாற்றத்துடன் காத்திருக்கும் நிலையை அவதானிக்க முடிகிறது.