எரிபொருளை வழங்குமாறு மக்கள் ஆர்ப்பாட்டம்
தலவாக்கலை லிந்துல பிரதேச மக்கள் தமது வாகனங்கள் மற்றும் தமது தொழிற்சாலைகளுக்குத் தேவையான எரிபொருளை வழங்குமாறு கோரி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் அசோக சேபாலவின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் லிந்துல நகரின் மையப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமது வாகனங்களுக்கு எரிபொருள் பற்றாக்குறையினால் தமது வர்த்தகங்கள் முற்றாக முடங்கியுள்ளதாகத் தெரிவித்தனர்.
எரிபொருளைப் பெறுவதற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும், அவ்வாறு வரிசையில் நிற்க வேண்டியிருந்தாலும், குறைந்தளவிலான எரிபொருளே தமக்கு வழங்கப்பட்டதாகவும், இதனால் தமது வர்த்தக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டதாகவும், பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் பற்றாக்குறையால் நுவரெலியா மாவட்டத்தில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் அசோக சேபால தெரிவித்துள்ளார்.