ஊரடங்கு வேளையிலும் மட்டக்களப்பு நகரில் ஒன்றுகூடிய மக்கள்

301 Views

IMG 3799 ஊரடங்கு வேளையிலும் மட்டக்களப்பு நகரில் ஒன்றுகூடிய மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்கு சட்டத்தினையும் மீறி நகரின் பார்வீதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் இன்று மாலை நேரத்தில் பெருமளவானோர் நீண்ட வரிசையில்  எரிபொருளுக்காக காத்திருந்தனர்.  

நேற்று மாலை தொடக்கம் நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றினை இறுக்கமான நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் முன்னெடுத்திருந்தனர்.

எரிபொருள் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினர் மக்களை ஒழுங்குபடுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.

Leave a Reply