இராணுவத்தினர் அபகரித்துள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டம்

129 Views

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில், இராணுவத்தினர் அபகரித்துள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி, காணிகளுக்குரிய தமிழ்மக்கள் இன்று (27) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக கேப்பாப்புலவு இராணுவ முகாமின் பிரதான வாயிலின் முன்பாக இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள காணிகளுக்குரிய தமிழ் மக்கள், எமது நிலம் எமக்குவேண்டும் இராணுவமே வெளியேறு, எங்கள் சொந்தக் காணிகளுக்குள் இராணுவ முகாம் வேண்டாம், கேப்பாப்புலவு எமது பூர்வீக கிராமம், இனவழிப்பு யுத்தம் முடிந்து 14 ஆண்டுகள் கேப்பாப்புலவு மக்கள் இன்னமும் அகதிகளாக வீதிகளில், ஸ்ரீலங்கா இராணும் இன அழிப்பு இராணுவம் உள்ளிட்ட வாசங்கள் அடங்கிய பதாதைகளைத் தாங்கியவாறு, கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply