சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி தொடர்பான சட்டமூலம் மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டமூலத்திற்கு ஆதரவாக  91 பேரும் எதிராக 10 பேரும் வாக்களித்துள்ளனர்.

லக்ஷ்மன் கிரியெல்ல, அஜித் மான்னப்பெரும, அசோக் அபேசிங்க, அநுர திசாநாயக்க, விஜித ஹேரத், ஹரினி அமரசூரிய, வாசுதேவ நாணயக்கார, வீரசும வீரசிங்க, சரித ஹேரத் மற்றும் டிலான் பெரேரா ஆகியோரே சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 123 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பின் போது சபையில் பிரசன்னமாகவில்லை.