இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பு செவ்வாய்க்கிழமை ( 4 நவம்பர் 2025 ) புது டில்லியில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை புதுடெல்லியில் சந்தித்த சந்தர்ப்பம் குறித்து, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது எக்ஸ் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
நிதியமைச்சர் இலங்கையைப் பற்றி மிகுந்த அன்புடன் பேசியதுடன், இலங்கையை “ஒவ்வொரு வளத்தாலும், மனித ஆற்றலாலும் ஆசீர்வதிக்கப்பட்ட நாடு” என்று வர்ணித்தார். மத்திய அமைச்சரின் இந்தக் கருத்துக்கள், இலங்கையின் உயர்நிலையில் உள்ள வளங்களையும், மனித ஆற்றலையும் நாடு முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, அதன் உண்மையான திறனை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை நினைவுபடுத்துகிறது. இலங்கைக்கு நிர்மலா சீத்தாராமன் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவு மற்றும் அன்பான வார்த்தைகளுக்காக எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என பதிவிட்டுள்ளார்.



