2025ஆம் ஆண்டு போதைப்பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய ஒரு இலட்சத்து 81,554 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இந்த கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன், குறித்த காலப்பகுதியில் பெருந்தொகையான போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.
இதன்படி, 1,426 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன், 56,902 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 14,292 கிலோகிராம் கஞ்சாவுடன், 57,686 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், 32 கிலோகிராம் கொக்கைன் போதைப் பொருளுடன், 86 சந்தேகநபர்களும், 569 கிலோகிராம் ஹஷீஷ் போதைப்பொருளுடன் 1,338 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஸ் போதைப்பொருள் 2, 538 கிலோகிராமுடன், 65,542 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.