மாவீரர் நாளை முன்னிட்டு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்

100 Views

IMG 1832 மாவீரர் நாளை முன்னிட்டு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்

கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று (ஞாயிற்க்கிழமை) சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதி நடைபெறவுள்ள மாவீரர் நிகழ்வை முன்னிட்டு இந்த சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு மற்றும் மாவீரர்களுடைய பெற்றோர் நலன்  விரும்பிகள் சமூக செயற்பாட்டாளர்கள் சிவில் சமூக அமைப்பு பிரதிநிதிகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இணைந்து   இந்த சிரமதான பணியை முன்னெடுத்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

சிரமதானம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் புலனாய்வாளர்கள் அப்பகுதிக்கு வருகைதந்து புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக   தெரிவிக்கப் படுகிறது

தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த பெரும் பகுதியை இராணுவம் தம்வசம்  வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply