காலி முகத்திடலில் இனி ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது – நகர அபிவிருத்தி அதிகார சபை அறிவிப்பு

123 Views

காலி முகத்திடலில் இனிவரும் காலங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடியாது என நகர அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

அதேவேளை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட “ஆர்ப்பாட்ட இடம்” இனிவரும் காலங்களில் அங்கு இருக்காது எனவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

காலிமுகத் திடலை நான்கு மாதங்களுக்கு மேல் போராட்டகாரர்கள் பயன்படுத்தியிருந்தனர். எதிர்காலத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் மட்டுமே பொது வைபவங்களுக்கு பயன்படுத்த முடியும் என அதிகார சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply