முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி தொடர்பான தேசிய கொள்கையை தயாரிப்பதற்கான முதல் சுற்று கலந்துரையாடல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் இடம்பெற்றுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
‘அனைத்து முன் பிள்ளைப் பருவ மேம்பாட்டுக் கல்வி நிறுவனங்களும் ஒரே கொள்கையின் அடிப்படையில் செயல்படுவதற்குத் தேவையான கொள்கைகளைத் தயாரித்து, அதைக் கூட்டுக் கொள்கை அறிக்கையாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது’ என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அதேநேரம் அதனை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக முன்வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
‘அடுத்த ஆண்டு 1, 6 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடங்கப்படும் அதே நேரத்தில் இந்த முன் பிள்ளைப் பருவ மேம்பாட்டு கொள்கையை முன்வைக்க எதிர்பார்க்கப்படுகிறது’ என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
