செம்மணியில் உணவுத் தவிர்ப்புப் போரில் முஸ்லிம் உறவுகளும் பங்கேற்பு

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு சர்வதேசத்திடம் நீதிகோரி, செம்மணியில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் நேற்று முஸ்லிம் உறவுகளும் கலந்துகொண்டனர். போராட்டத்தின் ஐந்தாவது நாளான நேற்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள், முன்னாள் போராளிகள் உள்ளிட்டோர் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதன் போதே, முஸ்லிம் உறவுகளும் போராட்டத்தில் தம்மையும் இணைத்துக் கொண்டனர். சிறுவர் தினமான நாளை, செம்மணிப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர் என்புத்தொகுதிகளுக்கு நீதிகோருவதுடன், இந்தப் போராட்டம் நிறைவுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.