முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் நான்காம் நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் (15) யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுதூபியில் இடம்பெற்றது.
இதன் பொழுது மாணவர்களால் யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளிற்கு ஈகைச் சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி தொடர்ச்சியாக மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.