முல்லைத்தீவு- வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (29)  முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யுத்தம் நிறைவடைந்த நாள்முதல் தமது உறவுகளுக்கான நீதி கோரி போராடிவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந்த 2017 மார்ச் எட்டாம் திகதி முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கை அரசாங்கமும் காணாமல் போனோர் அலுவலகம் ஊடக இவர்களது சர்வதேச நீதி விசாரணை கோரிக்கையை முடக்கும் முகமாக பல நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தமது உறவுகளை அச்சுறுத்தி விபரங்களை பதிய முற்ப்படுவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

இந்நிலையில்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக திரண்டு காணாமல் போனோர் அலுவலக செயற்ப்பாடுகள் தமக்கு தேவையில்லை என வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.