திலீபன் நினைவேந்தல்- ரவிகரன் உள்ளிட்ட சிலருக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் தடை

ரவிகரன் உள்ளிட்ட சிலருக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் தடை

தியாகதீபம் தீலிபனுடைய நினைவேந்தலை மேற்கொள்வதற்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட சிலருக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட வர்கள் முல்லைத்தீவு காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதிக்குள் தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்தவுள்ளார் என  முல்லைத்தீவு காவல்துறையினர் 24.09.2021 அன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்குப் பதிவுசெய்திருந்தனர்.

அதனடிப்படையில்  இந்த வழக்கை ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா, தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்டவர்களுக்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

ரவிகரன் உள்ளிட்ட சிலருக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் தடை

இந் நிலையில் குறித்த தடையுத்தரவினை முல்லைத்தீவு காவல் நிலையப் பொறுப்பதிகாரி 25.09.2021 இன்று, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனின் இல்லத்திற்குச் சென்று கையளித்துள்ளார். அத்தோடு ஏனையவர்களுக்கும் தடையுத்தரவு இன்று வழங்கப்பட்டுள்ளது

மேலும் முல்லைத்தீவு காவல்துறையினர் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், முல்லைத்தீவு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன்  உள்ளிட்டவர்களுக்கும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் தியாகி திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்கு தடை உத்தரவுகளைப் பெற்று வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ilakku.org/ilakku-weekly-epaper-148-september-19-2021