யாழ்ப்பாணம் மருதங்கேணி காவல் நிலையத்தில் நாளை ஆஜராகுமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நான் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொள்ளவுள்ளதால் இது குறித்து சபாநாயகருக்கு அறிவிப்பேன் என தெரிவித்துள்ளேன் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
சபாநாயகரை தொடர்புகொள்ள முயன்றேன் தொடர்புகொள்ள முடியவில்லை பிரதிசபாநாயகருக்கு இது குறித்து அறிவித்துள்ளேன் எனஅவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2ம் திகதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினை அரச புனாய்வுப்பிரிவினைச் சேந்தவர் தாக்கி விட்டு தப்பிச் சென்றதோடு, பிறிதொரு நபர் துப்பாக்கிப்பிரயோகம் நடத்துவதற்கு இலக்குவைத்துள்ள சம்பவமொன்று நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.