‘2024ஆம் ஆண்டில் காலநிலை மாற்றம் காரணமாக 5 இலட்சத்து 15 ஆயிரத்து 306 இலங்கை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.
‘வெள்ள அனர்த்தம் காரணமாகவே அதிகளவான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என்றும் அந்த நிதியம் குறிப்பிட்டுள்ளது. சர்வதேச கல்வி தினமான இன்று (24) ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘காலநிலை மாற்றத்தினால் சிறுவர்களின் கற்றல் மற்றும் எதிர்காலம் ஆபத்தில் இருக்கின்றனர்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘கடந்த ஆண்டு காலநிலை மாற்றம் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏழு மாணவர்களில் ஒருவரின் பாடசாலைக் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘தற்போதைய சூழ்நிலையில் சிறுவர்களுக்கு உளநலப் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்திருக்கிறது’ ‘இந்தச் சவாலானது பெற்றோர்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது’
இதன்படி, பாதுகாப்பான கற்றல் அமைப்பிலும், ஸ்மார்ட் கற்றல் வசதிகளிலும் முதலீடு செய்வது மிகவும் முக்கியமானது என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது.
