இந்திய அரசாங்கத்தின் மற்றுமொரு அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை (9) பிற்பகல் வந்தடைந்துள்ளது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு பொருட்கள் மற்றும் அனர்த்த நிவாரண பொருட்கள் இந்த விமானத்தில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இந்திய விமானப் படைக்கு சொந்தமான மற்றுமொரு உலங்கு வானூர்தி கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளது.




