ஐ.நாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை  நடைமுறைப்படுத்த அதிகளவு நிதி தேவை

ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தை  நடைமுறைப்படுத்துவதற்கு ஆறு மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாக நிதி தேவைப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் முழுமையான தேவைகள்  அதிகரிக்கும்  என ஐ.நா அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

தீர்மானத்தின் 8 மற்றும் 19வது பத்திகளில் ஆணையை நிறைவேற்றுவதற்கு 2022 முதல் 2024 வரை பல செயற்பாடுகள் அவசியம் என குறிப்பிட்டுள்ள குறித்த  அதிகாரி பெருமளவு வளங்களும் தேவைப்படும் என தெரிவித்துள்ளார்.