வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்தை அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பில் எக்ஸ் தளத்தில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பதிவிட்டுள்ளதாவது,
நியாயமான, சமநிலையான வர்த்தகத்தை மேம்படுத்துதல் மற்றும் துறைமுகங்கள் முதல் பொது மக்கள் வரை அமெரிக்க – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் தொடர்பில் கலந்துரையாடினோம்.
இந்தோ – பசிபிக் பங்காளர்களாக நாங்கள் பாதுகாப்பு மற்றும் திறந்த வர்த்தகத்தைப் பாதுகாக்கிறோம். பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு முக்கியமான கடல் பாதைகளைப் பாதுகாக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.