இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறுவதைக் கட்டுப்படுத்துவதற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சால் அனைத்து வித தலையீடுகளும் மேற்கொள்ளப்படும் என்று பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரனால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்திய மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இராஜதந்திர மட்டத்திலான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது அத்துமீறினால் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது. இதை மீனவர்களும் கூறுகின்றனர். அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு உரியதலையீடுகளை அமைச்சு மேற்கொள்ளும்- என்றார்.



