ஐ.நா.சபையின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி ரணில் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பிரான்சின் தலைநகர் பாரிஸில் ஆரம்பமான புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டபோதே, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அதே நேரம் பொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர் பெட்ரிசியா ஸ்கொட்லண்ட் மற்றும் பிராங்கோபோன் அமைப்பின் செயலாளர் நாயகம்,நெதர்லாந்தின் பிரதிப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் சிக்ரிட் காக்,  ஆகியோரையும்  ரணில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்நிலையில், இலங்கைக்கு கடன்வழங்கிய நாடுகள் கூடிய விரைவில் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளை பூர்த்திசெய்யவேண்டும் என  அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஜனெட் யெலென் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கை குறித்த சர்வதேச மாநாட்டில்  இலங்கை ஜனாதிபதியை அவர் சந்தித்துள்ளார்

இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் உதவி கிடைத்துள்ளமை தனக்கு மகிழ்ச்சியளித்துள்ளது என தெரிவித்துள்ள அவர் இலங்கையில்; சீர்திருத்தம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை பாராட்டியுள்ளார்.