மின்னணு ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள், இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-அண்ட்ரே பிரான்ச் (Marc-André Franche) அவர்களைச் சந்தித்துள்ளனர்.
இச்சந்திப்பின் போது உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகப் போக்குகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA), தகவல் அறியும் உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.
நேற்று (09) முற்பகல் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.



