ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

அதன்படி, இந்த சந்திப்பில் மனித உரிமைகள், பொருளாதார மீட்பு, GSP+ வரிச்சலுகை , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல்கள் மற்றும் பிற தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.