மாலைத்தீவுகளுக்கான கனடா உயர்ஸ்தானிகர் -வடக்கு மாகாண ஆளுநர் இடையே சந்திப்பு

வடக்கு மாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் திங்கட்கிழமை (26) வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினரை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது போர் முடிவுற்ற கடந்த 16 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களை விட, தற்போதைய அரசாங்கம் வடக்கு மாகாணம் தொடர்பில் கூடுதல் கரிசனையுடனும், அக்கறையுடனும் செயற்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபை இயங்கிய காலத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும், கனடாவின் ரொரன்டோ மாநகரத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட நட்புணர்வு ஒப்பந்தம் தொடர்பில் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

அந்த ஒப்பந்தத்தின் கீழான செயற்பாடுகளை மீளவும் வலுப்படுத்துவது தொடர்பில் கரிசனை செலுத்துமாறு உயர்ஸ்தானிகரிடம் கேட்டுக்கொண்டார்.