நிதி இராஜாங்க அமைச்சர் – உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவ பணிப்பாளர் இடையில் சந்திப்பு

நிதி இராஜாங்க அமைச்சர் - உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவ பணிப்பாளர் இடையில் சந்திப்பு

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவ பணிப்பாளர் என்னா பியர்டரை சந்தித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம்(IMF) மற்றும் உலக வங்கி இணைந்து ஏற்பாடு செய்த ஸ்ப்ரிங் மாநாட்டிற்கு இணையாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் சமூக பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காகவும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்காகவும் ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் இதில் கலந்துரையாடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பொருளாதார அபிவிருத்திக்காக முன்னெடுக்க வேண்டிய பொருளாதார மறுசீரமைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியத்தையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

எதிர்பார்த்துள்ள பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் IMF வேலைத்திட்டத்தை சிறப்பாக முன்னெடுப்பது தொடர்பில் இதில் கலந்துரையாடப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சமூக பாதுகாப்பு கட்டமைப்பு, நிதி கொடுக்கல் வாங்கல் வேலைத்திட்டம் தொடர்பான நிபுணர்களுடனும் இராஜாங்க அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.