இந்திய  துாதரர் மற்றும் சபாநாயகருக்கிடையில் சந்திப்பு

100 Views

இந்திய  துாதரர் கோபால் பாக்லே இன்று (07) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலா உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளை விஸ்தரிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்கு உயர்ஸ்தானிகருக்கு சபாநாயகர் நன்றி தெரிவித்ததாக பாராளுமன்ற ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்கவும் கலந்துகொண்டார்.

Leave a Reply