வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் தகர்க்கப்பட்டமைக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்

IMG 20230330 100914 1 வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் தகர்க்கப்பட்டமைக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்

வவுனியா வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் உடைத்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணி  நடைபெற்றது.

Gallery

வவுனியா, நெடுங்கேணி, வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் உட்பட ஏனைய விக்கிரகங்களும் கடந்தவாரம் உடைத் தழிக்கப் பட்டிருந்தமை பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், இந்த விசமச் செயலை செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்திக் குறித்த பேரணி இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘வெடுக்குநாறிமலை மீதான தாக்குதல் கௌதம புத்தரின் ஆன்மீகத்தோல்வி, ஈழத்தமிழனை வேரறுக்க நினைக்காதே, வெடுக்புகுநாறி எங்களின் இடம், மத சுதந்திரத்தைத் தடுக்காதே, தொல்பொருள் திணைக்களமே வெளியேறு’ போன்ற கோசங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைளையும் ஏந்தியிருந்தனர்.

மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திரனிடமும், ஜனாதிபதிக்கான மனு ஜனாதிபதியின் வடக்கிற்கான இணைப்பாளரும், மேலதிக செயலாளருமான ஈ.இளங்கோவன் அவர்களிடமும் மனு கையளிக்கப்பட்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களும் மனு வழங்கப்பட்டுள்ளது.

IMG 20230330 100259 scaled வெடுக்குநாறிமலையில் விக்கிரகங்கள் தகர்க்கப்பட்டமைக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்

இதனையடுத்து, இது குறித்து ஜனாதிபதிக்குத் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் மற்றும் அரச அதிபர் ஆகியோர் இணைந்து வாக்குறுதி வழங்கியதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், சார்ள்ஸ் நிர்மலநாதன், மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், சரவணபவன் மற்றும் பொதுமக்கள்  கலந்து கொண்டுள்ளனர்.