இலங்கை-அரசியல் ஸ்திரமின்மையால் பல பிரச்சனைகள் உருவாகின்றதாக தகவல்

இலங்கையில் இன்று  நிலவும் அரசியல் ஸ்திரமின்மையால் பல பிரச்சனைகள் உருவாகின்றன என ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகளுக்கான நிறுவனம்   தெரிவித்துள்ளது.

தேர்தல் முறைமையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என நிறைவேற்றுப் பணிப்பாளரான மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடியின் தீவிரம் தற்போது உணரப்பட்டு வருவதாகவும், எனினும் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசியல் சீர்திருத்தங்கள் பாராட்டத்தக்கவை அல்ல. குறிப்பாக அரசியல் தலைமையினால் அரசியலமைப்பின் 21வது திருத்தம் தொடர்பில் துரிதமான சீர்திருத்தங்கள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.

21வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களை விரைவாகக் குறைக்க முடியும் என்றும் பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரத்தை வழங்க முடியும் என்றும்  எனினும் நீதியமைச்சரும் பிரதமரும் ஜனாதிபதியை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே 21வது திருத்தச் சட்டம் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துள்ளதாக அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

Tamil News