அரசியலமைப்பு குறித்து கேள்வி எழுப்பிய – மனோ, சாணக்கியன்

03. ‘புதிய அரசியலமைப்பொன்றின் மூலமே நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும்’ என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (27) கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ‘பொருளாதார பிரச்சினைக்குத் தீர்வு கண்டதன் பின்னரே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வையே எதிர்பார்த்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார். இதேவேளை ‘புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமா? இல்லையா?’ என்று இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் இன்று (27) கேள்வி எழுப்பினார்.

‘பொறுப்புகூறல் விடயத்தில் கடந்தகால அரசாங்கங்களை போன்றே தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் செயற்படுகிறது’  ‘அரசியலமைப்பு விடயமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது’. ‘புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமானால் அதன் உள்ளடக்கம் என்ன? என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இதன்போது கேள்வியெழுப்பியுள்ளார்.