கொழும்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மன்னார் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு – ஜிந்துப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு சிகையலங்கார நிலையத்தில்  கடந்த 14ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மன்னார் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன், மன்னார் – முசலி பிரதேச செயலாளர் பிரிவினைச் சேர்ந்த பண்டாரவெளி பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய ஒருவர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சிகை அலங்கார நிலைய உரிமையாளர் உட்பட நால்வர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் குறித்த இளைஞன், முடிவெட்டுவதற்காக தனது நண்பர் ஒருவருடன் சம்பந்தப்பட்ட சிகையலங்கார நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அதில் சிலாவத்துறையை சேர்ந்த ஒருவர் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதாள உலகக் குழுக்களுக்களுக்கு இடையிலான மோதல் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ரி 56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கொழும்பு கரையோர காவல்துறையினர் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.