மன்னார் மெசிடோ நிறுவனத்தால் முல்லைத்தீவு வைத்திய சாலைக்கு மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு

IMG 20210715 151512 1 மன்னார் மெசிடோ நிறுவனத்தால் முல்லைத்தீவு வைத்திய சாலைக்கு மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு

மன்னார் மெசிடோ நிறுவனத்தால் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலைக்கு 21 இலட்சம் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு மற்றும்  கிருமி நீக்கும் இயந்திரங்கள்  நேற்று கையளிக்கப் பட்டது.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளை நோய்த் தொற்றில் இருந்து காப்பதற்காக முல்லைத்தீவு மாவட்ட செயலாளரின் வேண்டு கோளுக்கு அமைவாக (21,42500/-) இருபத்தி ஒரு இலட்சத்து 42 ஆயிரத்து 500 ரூபா பெருமதியான நோய் நிலை கண்காணிப்பு இயந்திரம் மற்றும் கிருமி நீக்கும் இயந்திரங்கள் முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் உமாசங்கர் அவர்களிடம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைத்து மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் திரு யாட்சன் பிகிராடோ அவர்களால் நேற்று கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் திரு.ஜேசு ரெஜினோல்ட் முல்லைத்தீவு மாவட்ட உதவி பிரதேச செயலாளர் திருமதி.எல்.கேகிதா வைத்திய அதிகாரிகளான வைத்தியர் திரு.சோபன் வைத்தியர் திரு.விதுரன் மற்றும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணியாளர்களும் போன்றோர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 மன்னார் மெசிடோ நிறுவனத்தால் முல்லைத்தீவு வைத்திய சாலைக்கு மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு