கதுருவெலயிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று மன்னம்பிட்டிய கொட்டாலிய பாலத்திலிருந்து ஹந்தப்பன நீர்பாயும் கால்வாயில் வீழ்ந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்தப் பாலத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது பாலத்திலிருந்து கவிழ்ந்தே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இருள் சூழ்ந்ததால் காயமடைந்தவர்களை மீட்பதில் சிரமம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.