”மஹிந்த இராஜபக்சதான் பொன்சேகாவை இராணுவத் தளபதி பதவிக்குக் கொண்டுவந்தார். பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் அவரை உலகில் எந்த நாட்டுக்குச் கொண்டுசென்றாவது பாதுகாக்குமாறு கூறிய தலைவர்தான் மஹிந்த இராஜபக்ச. இப்படிபட்டவரையே அவர் இன்று கடுமையாக விமர்சித்துவருகின்றார்.”
இவ்வாறு மஹிந்த இராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
அத்துடன், இறுதிப்போரின்போது மஹிந்த இராஜபக்சவால் போர் நிறுத்தம் வழங்கப்பட்டது என்பது உட்பட பொன்சேகாவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் அவர் முற்றாக நிராகரித்தார்.
அரசியல் ரீதியில் வங்குரோத்தடைந்துள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, இன்னமும் போர் மனோ நிலையிலேயே காணப்படுகின்றார் எனவும் மஹிந்த இராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
வெள்ளைக்கொடிக் கதையைக்கூறி படையினரைக் காட்டிக்கொடுத்த நபர்தான் இந்த பொன்சேகா ஏனவும் இது நாட்டு மக்களுக்கும் தெரியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.