முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவில் இன்று செவ்வாய்க்கிழமை (3) காலை முன்னிலையாகியுள்ளார்.
மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் “சிறிலிய” என்ற பெயரில் பயன்படுத்தி வங்கி கணக்கு தொடர்பில் பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு ஜனவரி 27 ஆம் பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் தனிப்பட்ட விடயம் காரணமாக ஷிரந்தி ராஜபக்ஷ ஜனவரி 27 ஆம் அன்று பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவில் முன்னிலையாவில்லை. இதனால் பெப்ரவரி 3 ஆம் திகதி காலை 09.30 மணிக்கு பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவில் முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதே நேரம், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலுக்கு அமைய அவர் அங்கு முன்னிலையானார்.
இதற்கு முன்னரும் நாமல் ராஜபக்சவுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் நாட்டில் இல்லாத காரணத்தினால் பிறிதொரு திகதியை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.



