மஹிந்த, பசில், உள்ளிட்ட நாள்வருக்கு வௌிநாட்டு பயணத்தடை விதிக்குமாறு மனு தாக்கல்

110 Views

மஹிந்த ராஜபக்ஸ, பசில் ராஜபக்ஸ, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்களான அஜித் நிவாட் கப்ரால் மற்றும் பேராசிரியர் W.D.லக்ஷ்மன் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக வௌிநாட்டு பயணத்தடையை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவிடுமாறு கோரி, இலங்கை வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் சந்த்ரா ஜயரத்ன உள்ளிட்ட தரப்பினரால் முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவுடன் இந்த நகர்த்தல் பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த அடிப்படை உரிமை மனுவானது உயர் நீதிமன்றத்தில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆராயப்படவுள்ளதாக நகர்த்தல் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply