இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் உத்தேச பாலம் -மல்வத்த பீடாதிபதி கவலை

இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் விதத்தில் உத்தேச பாலத்தை அமைப்பது குறித்து மல்வத்த பீடத்தின்மகாநாயக்க தேரர்  திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர்  கவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கான இந்திய  தூதுவர் சந்தோஸ் ஜாவுடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பின்போது உத்தேச பாலம் குறித்த கரிசனையை வெளியிட்டுள்ள அவர் பாலத்தை அமைப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் அதன் காரணமாக ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தேச பாலத்தினால் ஏற்படக்கூடிய அரசியல் விளைவுகள்இபோதைபொருள் கடத்தல் அதிகரிப்பு குறித்தும்  திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் கருத்து தெரிவித்துள்ளார்.