‘நாம் இனவாதிகள் அல்ல, நாம் இலங்கை தமிழர்கள். போரில் இறந்தவர்களை நாம் இந்த மாதம் நினைவு கூருகின்றோம். பிரபாகரன் எமக்கு கடவுள். அவர் சிங்கள மக்களுக்கு எதிரானவர் அல்ல, எம்மை படுகொலை செய்த சிங்கள அரசுகளுக்கே எதிரானவர் என யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் கொழும்பில் இருந்து வெளிவரும் த டெய்லி மிரர் பத்திரிகைக்கு இன்று(25) தெரிவித்துள்ளார்.
மேலும் ‘எனது தந்தை இலங்கை காவல்துறையில் பணியாற்றியிருந்தார், பல இடங்களில் பணிபுரிந்த அவர் 1983 ஆம் ஆண்டு கலவரத்தின் பின்னர் யாழ்ப்பாணம் சென்றிருந்தார். அதன் பின்னர் அவர் 1987 ஆம் ஆண்டு முதல் விடுதலைப்புலிகளுடன் இயங்கிய அவர், பின்னர் தமிழீழக் காவல்துறையில் பணியாற்றியிருந்தார் என்றும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கும் தனது அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தார் என அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.