அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக, நாம் ஒன்றிணைந்து அணிதிரள வேண்டும். மாறாக அமைதியாக இருப்போமானால் அனைத்தையும் இழந்து விடுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஏனைய கட்சிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.
அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களுக்குப் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களுடனான சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் மிகவும் திட்டமிட்டவகையில் இந்த நாட்டில் ஒரு கட்சி மட்டுமே அரசாங்கத்தை அமைத்து ஆட்சியை நடத்தும் எண்ணக்கருவை முன்னெடுத்துவருகின்றது. மரண உதவிச் சங்கம், விவசாயிகள் சங்கம், மீனவர் சங்கம் மற்றும் இளைஞர் கழகம் முதல் மதஸ்தலங்களின் பரிபாலன சபை வரை அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க முயற்சித்து வருகின்றனர்.
சகல சமூக அமைப்புகளினதும் அதிகாரத்தை வலுக்கட்டாயமாகக் கைப்பற்ற முயற்சித்துவருகின்றனர். எனவே, நாம் அமைதியாக இருந்தால், அரசாங்கம் எல்லாவற்றையும் கைப்பற்றிவிடும். இந்த அடக்குமுறைகளுக்கு எதிராக நாம் ஒருங்கிணைந்து அணிதிரள வேண்டும். அது நடந்தால், தற்போதைய அரசாங்கம் எதிர்பார்க்கும் ஒரு கட்சி ஆட்சி என்ற எண்ணக்கருவைத் தோற்கடிக்கமுடியும்- என்றார்.