சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்- சங்கானையில் கவனயீர்ப்பு பேரணி

சிறுவர் தினத்தை முன்னிட்டு, சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் என்னும் தொனிப்பொருளில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியும் விழிப்புணர்வு கூட்டமும்  யாழ்ப்பாணம் சங்கானையில்  நடைபெற்றது.

சங்கானை பிரதேச செயலர் திருமதி பிரேமினி பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனவிரத்ன  பலர் கலந்துகொண்டனர்.